July 13, 2017
உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாடல்: 2 தலைமுறைகளை அழிக்கும் டாஸ்மாக் விஷம் போல் பரவியுள்ளது !
டாஸ்மாக் கடைகள் மூலம் எவ்வளவு மதுவிற்க அரசு இந்த ஆண்டு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாகவே போராட்டம் நடத்துகின்றனர் என்று நீதிபதிகள் கூறினர்.
மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தை யாரோ தூண்டி விடுவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர். மதுக்கடைக்கு எதிராக போராடி கைதான நாம் தமிழர் கட்சியினரை விடுவிக்க உத்தரவிட்ட வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் சிறைச்சாலைகளில் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் எத்தனை சிறைகளில் உளவியல் ஆலோசகர்கள் அரசு நியமித்துள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிறைச்சாலைகளில் லோக் அதாலத் நடைபெறுகிறதா எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிறையில் இருந்து விடுதலையானோர் மறுவாழ்வுக்கான நல்வாழ்வு குழு இயங்குகிறதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இப்போது டாஸ்மாக் கடையை மூடினால் அடுத்த 2 தலைமுறைக்கு பிறகு வருபவர்களை காக்க முடியும் என்றும் 2 தலைமுறைகளை அழிக்கும் டாஸ்மாக் விஷம் போல் பரவியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாடல்: 2 தலைமுறைகளை அழிக்கும் டாஸ்மாக் விஷம் போல் பரவியுள்ளது !
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.