July 20, 2017
குடியரசு தலைவர் தேர்தலில் 21 செல்லாத வாக்குகளாம்: ஓட்டு போட தெரியாத எம்.பிக்கள் !
இன்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, 21 எம்.பிக்கள் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 14வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர்.
இன்று மாலை 3.30 மணியளவில் வெளியான ததகவல்படி, ராம்நாத் கோவிந்த் 369576 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது 522 எம்.பிக்கள் வாக்களித்திருந்தனர் அவருக்கு. அதேநேரம், மீரா குமாருக்கு 225 எம்.பிக்கள் வாக்களித்தாக அறிவிக்கப்பட்டது. இதன் மதிப்பு 159300 ஆகும்.
21 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு வாக்களிக்க தெரியவில்லையா, வேண்டுமென்றே இப்படி செய்தனரா என்பது புரியவில்லை. இவ்வாறு செல்லாத வாக்களித்த எம்.பிக்கள் யார், யார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
குடியரசு தலைவர் தேர்தலில் 21 செல்லாத வாக்குகளாம்: ஓட்டு போட தெரியாத எம்.பிக்கள் !
Reviewed by Admin
on
July 20, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.