Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2017

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.20 கோடி வரை அபராதம்: இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் !


தமிழக மீனவர்களுக்கு ரூ. 20 கோடி அபராதம் விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடல் தொழில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் எல்லை தாண்டி மீன் பிடித்தால், ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதனால், தமிழக மீனவர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் எல்லை தாண்டி மீன் பிடிக்க தடை விதித்து, அந்நாட்டி மீன்வளத்துறை அமைச்சர் மசோதா தாக்கல் செய்தார். கடந்த 6 மாதமாக இந்த மசோதா நிலுவையில் இருந்து வந்தது. இதைதொடர்ந்து இன்று இலங்கை நாடாளுமன்ற கூட்டம் கூடியது. அப்போது, கடல் தொழில் சட்ட திருத்த மசோதா ஏற்கப்பட்டது.

மேலும், இந்த மசோதாவில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தினால், மீனவர்கள் மீது அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, எதிர்க்கட்சிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் வாதம் செய்து வருகின்றனர். இலங்கை நாடாளுமன்றத்தில் கடல் தொழில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழக மீனவர்கள் கடலில் கால் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கடல் தொழில் சட்ட திருத்த மசோதாவுக்கு, இலங்கை மீனவர்களும், மீனவ அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா தாக்கல் செய்ததன் மூலம், அன்னிய நாட்டு கப்பல்கள், இலங்கை எல்லையில் நுழைய முடியாது என கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.