Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2017

ஸ்ரீநகர் குடிமைத் தூதராக 18 வயது இளைஞர் நியமனம் !


ஸ்ரீநகரின் குடிமைத் தூதராக 18 வயது இளைஞர் பிலால் தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பந்திபோரா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் பிலால் தர் குப்பைகளை அகற்றும் பணி செய்து வருகிறார். இவ்வாறு அகற்றப்படும் குப்பைகளை விற்று ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை வருமானம் ஈட்டி வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வரும் இவர் இது வரை 12,000 கிலோ குப்பைகளை அகற்றியுள்ளார்.

இவரது இந்த முயற்சியை பாராட்டும் வகையில் ஸ்ரீநகர் நகராட்சி இவருக்கு குடிமைத் தூதர் என்ற பொறுப்பை வழங்கியுள்ளது. மேலும் மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரசாரம் செய்யவும் நகராட்சி சார்பாக இவருக்கு சிறப்பு சீருடையும் வாகனமும் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.