Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2017

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலி: குஜராத்தில் பயங்கரம் !


குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் வெள்ளத்தில் மூழ்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளது. அங்கு இதுவரை 110க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 40,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதை போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குஜராத் மட்டுமல்லாமல் அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம், ஒடிஷா, பீகார் ஆகிய மாநிலங்களும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அஸ்ஸாமில் இதுவரை 75 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.