Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2017

14-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்


நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜக்தீஷ் சிங் கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் மூலம் நாட்டின் முதல் குடிமகன் என்றும் பெருமைமிக்க பதவியான குடியரசுத் தலைவர் பதவியில் ராம்நாத் கோவிந்த் வரும் 5 ஆண்டுகளுக்கு இருப்பார். குடியரசுத் தலைவராக பதவியேற்றதை அடுத்து ஜனாதிபதிக்கான இருக்கையில் ராம்நாத் கோவிந்த் அமர்ந்தார். கடந்த 5 ஆண்டுகளாக குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து இந்த பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் இன்று முறைப்படி நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ளார். நாட்டின் முதல் தலித் குடியரசுத் தலைவராக கடந்த 1997 முதல் 2002 வரை கே.ஆர்.நாராயணன் பணியாற்றினார். அவருக்கு அடுத்து 2-வது தலித் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் பங்கேற்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் OPS, முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.