Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2017

கேரளாவில் பொதுமக்கள் பீதி: வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் 124 பேர் உயிரிழப்பு !


கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபும், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா போன்ற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

இங்குள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதி இல்லாததால் ஏராளமான நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை நிலவுகிறது.

இந்த வருடம் மட்டும் மாநிலம் முழுவதும் 124 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இதனால் மாநில சுகாதார துறை அதிகாரிகள் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள்தோறும் சென்று சுற்றுப்புற தூய்மையின் அவசியம் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.