Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2017

மழை நீடிக்கும் என எச்சரிக்கை: வெள்ளத்தால் அசாமில் 11 மாவட்டங்கள் பாதிப்பு !


அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 11 மாவட்டங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. அசாம் மாநிலத்தில் லகிம்பூர், ஜோர்கட்,கோலாகட், கரீம்கஞ்ச் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் கடந்த 1 வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் 5-வது நாளாக அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.  மோரிகான், லக்‌ஷ்மிபூர், கோலாகாட், கட்சார் உள்ளிட்ட பகுதிகளில் மழை, வெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தகவல் தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய மோரிகாதன் மாவட்டத்தை சேர்ந்த தீபங்கர் விஸ்வாஸ் என்ற வாலிபர், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறினார். வீடு முழுவதையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக வேதனை தெரிவித்த அவர், கடந்த 1 வாரமாக பெரும் இன்னல்களுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

வெள்ளத்தின் அளவு உயர்ந்து வருவதால் வீடுகள் முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறினார். அரசு தரப்பில் இருந்து இதுவரை உதவி கிடைக்கவில்லை என்ற அவர், வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக கூறினார்.

8,000 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சாலைகள் அனைத்தையும் மழை நீர் வியாபித்து உள்ளதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தனித்தீவு போல காட்சியளிக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கிய 14,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் அசாம் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசாமில் மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அசாமில் இந்த ஆண்டில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.