July 24, 2017
பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு: கொடுங்கையூர் தீ விபத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு !
சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது.
தீ விபத்தில் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொடுங்கையூரைச் சேர்ந்த நரேஷ் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, கடந்த 15 ஆம் தேதி கொடுங்கையூரிலுள்ள பேக்கரியில் நடந்த தீ விபத்தில் பலர் படுகாயமடைந்தனர்.
தீயை அணைக்க வந்தபோது சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை பரமானந்தம், அபிமன்யூ, கடை உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த 14 பேரில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு: கொடுங்கையூர் தீ விபத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு !
Reviewed by Admin
on
July 24, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.