Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

ரத்தம் கேட்கும் சமூகம்... உயிர் கேட்கும் கரு... பரிதவிக்கும் 10வயது சிறுமி..!


26 வார கருவை கலைக்க 10வயது சிறுமிக்கு தடைவித்துள்ளது சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்.

குழந்தை பெற அந்த சிறுமியின் உடலுக்கு தகுதி இல்லை எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியாவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 45 ஆயிரம் தாய்மார்கள் குழந்தை பிறப்பின்போது உயிரிழப்பதாக கூறுகிறது ஆய்வறிக்கை ஒன்று.

இந்நிலையில் சத்தீஸ்கரில் 10வயதே நிரம்பிய சிறுமி அவருடைய உறவினரால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டர்.

இதன் பின்னர் அந்த சிறுமியின் வயிற்றில் கரு ஒருவானது. இது அவர்களது தாய், தந்தைக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விவகாரம் தெரிவதற்குள் சிறுமியின் வயிற்றில் இருந்த கரு 26 வார வளர்ச்சியை எட்டியிருந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வேறுவழியின்றி நீதிமன்றத்திற்கு சென்றார்கள்.

காலம் கடந்து விட்டதால் தற்போது கருகலைப்பு செய்தால் சிறுமியின் உயிருக்கே ஆபத்து வரும் என கூறி கருகலைப்பு செய்ய சத்தீஸ்கர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதற்கிடையே குழந்தையை பெரும் அளவிற்கு சிறுமியின் உடல் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக சிறுமியின் எலும்புகள் மற்றும் கருப்பை பலமானதாக இல்லை என்றும் கூறும் மருத்துவர்கள் ஒருவேலை இந்த பிரசவம் நடந்தால் சிறுமியின் பிறப்புருப்பு பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக ரத்தம் வெளியாகி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனக் எச்சரிக்கின்றனர்.

மேலும் கருவில் இருக்கும் குழந்தையின் தலை சிறுமியின் உடலிலேயே சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகளுக்கும் அதிகம் உள்ளதாக அவர்கள் சொல்கின்றனர்.

இதனால் கருவை சுமந்துகொண்டு இருக்கும் அந்த சிறுமியின் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது.

India’s Medical Termination of Pregnancy act என சொல்லப்படும் பெண்களின் கருகலைப்பு சட்ட விதிமுறை கடந்த 1971 ஆண்டு கொண்டுவரப்பட்டது.

அதன்படி 20 வாரத்திற்கு மேல் கருகலைப்பு செய்வது சட்டவிரோதமாகிறது.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் ஏராளமான பெண்கள், சிறுமிகள், இந்த கருகலைப்பு சட்டவிதிமுறையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த சட்டவிதிமுறையில் திருத்தம் கொண்டுவர பெண்ணிய ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

இவ்வாறு இருக்க எம்.டி.பி என சொல்லப்படும் கருகலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பிரதமர் அலுவலகம் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.