Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

இந்த ஐடியா நல்லா இருக்கே: சேரி புகழ் காயத்ரி 10 நாட்கள் சேரியில் தங்க வேண்டும் !


நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என ஜாதிய வெறியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை திட்டியது பூதாகரமாக வெடித்துள்ளது.

சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன. பல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை இதற்கு தெரிவித்துள்ளனர்.

காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜாவும் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னதாக இந்து மக்கள் கட்சி இந்த நிகழ்ச்சி குறித்து புகார் அளித்துள்ளது. நடிகர் கமல் உள்பட அனைத்து போட்டியாளர்களையும் கைது செய்ய அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு முன்னர் கூட காயத்ரி ரகுராம் எச்ச என கூறியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சேரி பிஹேவியர் என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சேரி பிஹேவியர் என்று பிக்பாஸில் ஓவியாவை திட்டும் காயத்ரி மூலம் அவரது ஜாதிய வன்மம் வெளிப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் கருத்துக்கள் வருகிறது. சேரி பிஹேவியர் என்று சொன்ன காயத்ரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். பட்டியல் சாதி மக்களை வார்த்தை ரீதியாக இழிவு படுத்துவது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015-இன் கீழ் குற்றமாகும்.

இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்குவதை விட காயத்ரி ரகுராம் சேரியில் 10 நாட்கள் தங்கவேண்டும். 10 நாட்கள் சேரியில் தங்கியிருந்தால் அந்த மக்களை பற்றி நடிகை காயத்ரி ரகுராம் தெரிந்து கொள்வார் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.