Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2017

ஆடைக்குள் மறைத்து 102 ஐபோன்களை கடத்த முயன்ற இளம் பெண் கைது


சீனாவில் இளம் பெண் ஒருவர் 102 ஐபோன்களை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார். பின் அவர் கைது செய்யப்பட்டார்.

ஹாங்காங்கிலிருந்து ...

ஹாங்காங்கிலிருந்து, சீனாவிற்கு இளம்பெண் ஒருவர் சட்டவிரோதமாக ஐபோன்களை கடத்த முயன்றதால், அவரை விமானநிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஷென்சேன் பாவோ சர்வதேச விமானநிலையத்திற்கு ஹாங்காங்கிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் நடந்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி கோடைக்காலத்தில் ஸ்வெட்டர் வேறு அணிந்து சென்றுள்ளார் இதனால் சந்தேகமடைந்த விமானநிலைய அதி

102 ஐபோன்கள் ....

அவரிடமிருந்து மொத்தம் 102 ஐபோன்கள் மற்றும் 15 டிசாட் கடிகாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன் மொத்த எடை 9 கிலோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு ஐபோன்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது இது முதல்முறையல்ல எனவும் கடந்த 2015-ஆம் ஆண்டில் 84 ஐபோன்களைச் சீனாவுக்குக் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.