Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2017

அரசு உதவிப் பணம் கேட்ட விதவை பெண்ணை ஆசைக்கு இணங்க அழைக்கும் அரியலூர் கிராம நிர்வாக அதிகாரி (VAO) , ஆடியோவை வெளியிட்ட பெண்


அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தில் தனது கணவர் இறந்ததை தொடர்ந் விதவை உதவி பணம் கேட்டு விதவை பெண் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்த
விதவை பெண்ணிற்கு சிறுகடம்பூர் கிராம நிர்வாக அதிகாரி திருஞானம் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் எனது படுக்கைக்கு வந்தால் தான் உனக்கு 15 ஆயிரம் உதவி தொகை கிடைக்கும் எனக் கூறி அந்த பெண்ணை அழைத்துள்ளார்.

தனக்கு பணம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏழை பெண்களை சீரழிக்க நினைக்கும் இது போன்ற அதிகாரிகளை அம்பலப்படுத்தி சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக அந்த பெண் கிராம நிர்வாக அதிகாரி திருஞானம் செல்போனில் ஆபாசமாக பேசிய ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த அதிகாரி பேசுவதை கேட்கையில் அனைவருக்கும் நிச்சயம் ரத்தம் கொதிக்கும் என்பதில் ஐயமில்லை. இது போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கோரிக்கையாக உள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.