June 30, 2017
தங்கள் நாட்டில் IS ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி என அறிவிப்பு : மொசூல் நகர் மசூதியை கைப்பற்றியது ஈராக் படை !
ஈராக்கில் IS தீவிரவாத இயக்கத்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி கூறியுள்ளார். பல மாதங்களாக நடந்து வந்த சண்டையில் மொசூல் நகரத்தையும், புகழ்பெற்ற மசூதியையும் கைப்பற்றியுள்ளதாக ஈராக் பிரதமர் கூறியுள்ளார். இதனையடுத்து தங்களின் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக ஈராக் கூறியுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் அபாதி தெரிவித்துள்ளார்.
இது பற்றி பேசிய ஈராக் ராணுவ அதிகாரி மான் அல் சாதி, மொசூல் மசூதி மக்களுக்கு மிக முக்கியமான ஒன்று. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மசூதியை மீட்க பிரதமர் சூளுரைத்திருந்தார். அதன்படி தங்கள் படைகள் மசூதிக்குள் புயல் போல புகுந்து அவர்களை தாக்கியழித்து வசப்படுத்தியதாக தெரிவித்தார். பாதுகாப்பு படையின் கூட்டு முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஐ.எஸ் இயக்க தலைவர் அபுபக்கர் அல்பாக்தாதி இறந்தது உண்மை தான் என ஈரான் கூறியுள்ளது. கடந்த மாதம் சிரியாவில் நடந்த விமானப்படை குண்டுவீச்சில் பாக்தாதி கொல்லப்பட்டதா ரஷ்யா தெரிவித்திருந்தது. அமெரிக்கா இதனை உறுதிபடுத்தாத நிலையில் ஈரான் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் நாட்டில் IS ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி என அறிவிப்பு : மொசூல் நகர் மசூதியை கைப்பற்றியது ஈராக் படை !
Reviewed by Admin
on
June 30, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.