June 14, 2017
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது ஜிஎஸ்டி மசோதா!
தமிழக சட்டப்பேரவையில் இன்று, ஜிஎஸ்டி மசோதா தாக்கல்செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சர் வீரமணி இன்று சட்டப்பேரவையில் கோருகிறார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் நாளான இன்று, ஜிஎஸ்டி மசோதா தாக்கல்செய்யப்படுகிறது. வணிகவரித்துறை அமைச்சர் கேசி வீரமணி, இந்த மசோதாவைத் தாக்கல்செய்ய உள்ளார். இன்றே இந்த மசோதா, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 5%, 12%, 18%, 28% என்ற நான்கு பிரிவுகளின் கீழ் வரிகள் விதிக்கப்பட உள்ளன. வரி விலக்கு உள்ள பொருள்களும் சில இருக்கின்றன. மத்திய அரசின் ஜிஎஸ்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கெடுத்து, தமிழக அரசு ஜிஎஸ்டி-யை விரைவில் தாக்கல்செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், இன்று ஜிஎஸ்டி தாக்கல்செய்யப்பட உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது ஜிஎஸ்டி மசோதா!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.