Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2017

ஓஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு... வீடுகளில் கருப்புக்கொடிக் கட்டி போராட்டம்


கதிராமங்களம் பகுதியில் ஓஎன்ஜிசி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பணிகள் நடைபெற்று வருவதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்களத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பதித்துள்ள குழாய்களை அகற்றி மராமத்துப் பணிகளில் மேற்கொள்ள முயன்றது. இதற்கு கதிராமங்களம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுக்கும் பணிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய கரிம மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் பாதுகாப்போடு மராமத்து பணிகள் தொடங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசாரைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஓஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போலீசாரைக் கண்டித்தும் கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.