June 21, 2017
திரும்ப வருவேன்னு சொல்லு..! - தஞ்சையை குறிவைக்கும் ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி.தினகரன் அணி என மூன்றாகப் பிரிந்து நிற்கிறது. இந்த நிலையில், அந்த அணிகளை ஒன்றுசேர்க்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும்... மறுபுறம், அந்தந்த அணியினர் தம்முடைய ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அ.தி.மு.க தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில், முதல் முறையாகத் தஞ்சை வந்த ஓ.பி.எஸ்ஸுக்கு மிகப் பிரமாண்டமாக வரவேற்பு அளித்துள்ளார்கள் அ.தி.மு.க-வினர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் முன்னாள் பேரூராட்சிக் கழகத் தலைவர் கருணாநிதி மகள் திருமண வரவேற்புக்கு வந்த ஓ.பி.எஸ்ஸுக்கு அ.தி.மு.க-வின் ஏராளமான தொண்டர்கள், 'வருங்கால முதல்வரே', 'நீதான் அடுத்த அ.தி.மு.க-வின் தலைவர்' என்று கோஷ்ங்களை எழுப்பி வரவேற்பு அளித்துள்ளனர்.
திருச்சியிலிருந்து வந்த ஓ.பி.எஸ்ஸை ஆதரித்து, தஞ்சை மாவட்ட எல்லை பகுதியான செங்கிப்பட்டி, வல்லம், மருத்துவக் கல்லூரி, பசுபதி கோயில் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க தொண்டர்கள் சாலையின் இரு ஓரங்களிலும் நின்று வரவேற்பு அளித்தனர். செங்கிப்பட்டியிலிருந்து கிளம்பிய ஓ.பி.எஸ் வல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே கைகுலுக்கினார். அவருக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர் தொண்டர்கள்.
மருத்துவக் கல்லூரி அருகே பொதுமக்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., விவசாயிகளின் பிரச்னைகளைக்குச் சட்டப்பேரவையில் குரல் கொடுப்போம் என்று பேட்டி அளித்துவிட்டுக் கிளம்பினார். பின்னர், அங்கிருந்து தஞ்சை வழியாகப் பசுபதி கோயிலுக்குச் சென்றவர், பொதுமக்களை பார்த்து கை அசைத்தார். பாபநாசம் அருகேயுள்ள 108 சிவாலய கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர், அங்கிருந்து கருணாநிதியின் இல்ல திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார்.
தொண்டர்கள் கூட்டத்தில் மிதந்த பன்னீர்செல்வம்., சிறிதுநேரம் தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தார். பிறகு விழா ஏற்பாட்டாளர்களிடம், ''இதுபோன்று எப்போதும் உற்சாகத்தோடு இருக்க வேண்டும். (கை குலுக்கி) தஞ்சையில் இவ்வளவு பெரிய ஏற்பாட்டை செய்திருப்பீர்கள் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை'' என்றவர் தொடர்ந்து, ''மீண்டும் வருகிற 28-ஆம் தேதி தஞ்சைக்கு வருவேன். அப்போது உங்களிடம் விரிவாகப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாராம் ஓ.பி.எஸ்.
முன்னாள் குடிசைமாற்று வாரியத் தலைவர் கு.தங்கமுத்து மகன் டாக்டர் தங்க கண்ணன் இல்ல காதணி விழா 28-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதில், நிச்சயம் கலந்துகொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறார்கள், டாக்டர் தங்க கண்ணன் ஆதரவாளர்கள். அப்போது பட்டுக்கோட்டை மூவேந்தர் முன்னணிப் பொருளாளர் எம்.கே.செந்தில் பத்தாயிரம் பேருடன் இணையும் விழா என முப்பெரும் விழாவில் கலந்துகொள்வதற்காகத் தீவிர ஏற்பாடு செய்துவருகிறார்கள்.
திரும்ப வருவேன்னு சொல்லு..! - தஞ்சையை குறிவைக்கும் ஓ.பன்னீர்செல்வம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.