June 3, 2017
மத்திய அரசு!.... மக்களின் உணவை பறிக்கா கூடாது - நடிகர் அரவிந்த சாமி
மக்களின் உணவை பறிக்க காரணம் தேடிக்கொண்டிருகிறது மத்திய அரசு. அதே அக்கறையை மக்களுக்கு உணவளிப்பதில் காட்டவேண்டும் என நடிகர் அரவிந்த சாமி கூறி உள்ளார்.
மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில்
இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்த இந்து தேசப் பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள். கால்நடைகள் கொல்வது பற்றியான விஷயம் தேவையற்றது. அது மக்களை மூர்க்கமடையத்தான் செய்கிறது.
மாநில அரசு இந்த முடிவுக்கு இசைந்து கொடுத்தாலும் இல்லையென்றாலும், மத்திய அரசு இதிலிருந்து விலகியே இருக்க வேண்டும். நம்மில் பலர் 'பக்தாஸ்' அல்ல. நாம் வெறும் இந்தியர்கள். வாழு, வாழவிடு. வெறுப்பை நிறுத்துங்கள்'
என கூறி உள்ளார்.
இதே போல் நடிகர் அரவிந்த் சாமி இந்த விவகாரம் குறித்த கருத்து பதிவு செய்து உள்ளார்.
India- one of the top countries in the world for children suffering from malnutrition; ranked 67/80 on the world hunger index and yet ...
— arvind swami (@thearvindswami) June 1, 2017
இந்தியாவில் அதிக அளவில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக பசி குறியீட்டில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது.
We find reasons to take food off the table. Wish the same energy is spent on finding ways to feed people. That is what all religions preach
— arvind swami (@thearvindswami) June 1, 2017
மக்களின் உணவை பறிக்க காரணம் தேடிக்கொண்டிருகிறது அரசு. அதே அக்கறையை மக்களுக்கு உணவளிப்பதில் காட்டவேண்டும், அதை தான் அனைத்து மதங்களும் கூறுகின்றன, என கூறியுள்ளார்.
மத்திய அரசு!.... மக்களின் உணவை பறிக்கா கூடாது - நடிகர் அரவிந்த சாமி
Reviewed by மறத்தமிழன்
on
June 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.