நம் நாட்டில் எண்ணெற்ற மூலிகை பயன் கொண்ட காய் மற்றும் கீரை வகைகள் உள்ளன. அவற்றின் நன்மைகள் எளிதில் கூறி சுருக்கிட முடியாது. அவ்வளவு பயன்களை தருபவை. அப்படி ஒன்றுதான் முருங்கைக் கீரை.
முருங்கைக் கீரை : முருங்கைக் கீரையில் அதிக இரும்பு சத்து, கால்சியம் மற்றும் முக்கியமான ஃபைடோ சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே புற்று நோயை எதிர்க்கக் கூடியவை. அதோடு தினமும் அதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும் என்பது உறுதி. முருங்கைக் கீரையை உபயோகப்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.
எவ்வாறு தயாரிக்கலாம்
தேவையானவை : நீர் – 2 கப்
முருங்கைக் கீரை – அரைக் கப்.
செய்முறை : நீரை கொதிக்க வையுங்கள். அதில் நன்றாக கழுவிய முருங்கைக் கீரை அரை கப் எடுத்து போட்டு சில நிமிடம் கொதிக்க விடவும்.
செய்முறை : பின்னர் அடுப்பை அணைத்து நீரை ஆற வையுங்கள். அதன் பின் வடிகட்டி, அந்த நீரை தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிடும் முன் குடியுங்கள். அந்த வெந்த கீரையை சமைக்க எடுத்துக் கொள்ளலாம்.
வியாதிகள் நெருங்காது : இவ்வாறு செய்தால் எந்த நோயும் உங்களை நெருங்காது. சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும். புற்று நோயை தடுக்கலாம். ரத்த சோகை இருப்பவரகள் அல்லது பலஹீனமாக இருப்பவரகளுக்கு ஒருவாரத்தில் குணமாகும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.