June 4, 2017
இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஹெலிகாப்டர்: ராணுவம் எங்கே போனது
இந்தியா - சீனா எல்லையை ஒட்டி உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பாராகோதி பகுதியில் இன்று சீன ஹெலிகாப்டர் பறந்து உள்ளது.
இது குறித்து சாமோலி போலீஸ் கண்காணிப்பாளர் திருப்தி பட் கூறுகையில், “திபெத் பகுதியில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் இன்று இந்திய வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளது. பாராகோதி பகுதியில் சுமார் 4 நிமிடங்கள் ஹெலிகாப்டர் சுற்றி உள்ளது. எனினும், அது சீன ஹெலிகாப்டர்தானா என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியாது” என்றார்.
சாமோலி மற்றும் பிற பகுதிகளில் இந்திய வான் எல்லைப்பகுதிக்குள் சீன பகுதியில் இருந்து முந்தைய காலங்களிலும் அத்துமீறல் நடந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இன்று அத்துமீறி வந்த ஹெலிகாப்டர் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர் இல்லை என்பதை திருப்தி பட் தெளிவுபடுத்தினார்.
‘எந்த ஒரு அனுமதியும் பெறாமல் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஹெலிகாப்டர் வந்து உள்ளது அத்துமீறல். உள்ளூர் உளவுத்துறையும் அத்துமீறலை கண்டறிந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இந்தோ - திபெத் எல்லை காவல் படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் திருப்தி பட் கூறினார்.
இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஹெலிகாப்டர்: ராணுவம் எங்கே போனது
Reviewed by மறத்தமிழன்
on
June 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.