June 12, 2017
தவறாக நடக்க முயன்ற இளைஞர் ! செருப்பாலேயே அடித்து விரட்டிய பெண்கள் !!
குருகிராம் பகுதியில் பப்பில் பணிபுரியும் பெண்ணிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பெண்கள் அவரை பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்து விரட்டினர்.
தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் ஆட்டோவில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய் 3 பேர் கொண்ட கும்பல் அவரது 9 மாத பெண் குழந்தையும் வீசியெறிந்து கொன்றது.
இந்நிலையில் டெல்லியில் பப் ஊழியரிடம் குடிபோதையில் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குருகானில் பணிபுரியும் சில பெண்கள் எம்ஜி சாலையில் சாலையில் பேருந்துக்காக நின்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஃபுல் போதையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் அங்கு நின்றிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். அவரது கையை பிடித்து இழுத்தும் ஆடையை பிடித்தும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
இதனைக் கண்ட அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அந்த நபரை பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்து விரட்டினர். அப்போது அங்கு போலீசார் யாரும் இல்லை என கூறப்படுகிறது.
இளைஞரை பெண்கள் செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை ஆணையர் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கான்ஸ்டப்ள்களை சாதாரண உடையில் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால் உடனடியாக எப்ஃஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டெல்லியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவறாக நடக்க முயன்ற இளைஞர் ! செருப்பாலேயே அடித்து விரட்டிய பெண்கள் !!
Reviewed by Admin
on
June 12, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.