Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2017

நெடுவாசல் விவசாயிகளுக்கு தமிழக அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது: சொல்கிறார் ஸ்டாலின்


நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட பிரச்சனையில் விவசாயிகளுக்கு அதிமுக அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஜெம் லெபாரட்டரீஸ் மத்திய அரசிடம் அனுமதி வாங்கியுள்ளது. ஓ.என்.ஜி.சி பெயரில் உள்ள குத்தகை உரிமையை தங்கள் பெயருக்கு மாற்ற தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் குத்தகை தங்களுக்கு மாற்றித்தரப்படும் என்று நம்புவதாக ஜெம் நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.  மேலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜெம் நிறுவனத்தின் கோரிக்கை குறித்தும் அரசு விளக்கம் கேட்டுள்ளது.

இதன்மூலம் ஜெம் நிறுவனத்துடன் தமிழக அரசு கடித தொடர்பு வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசுக்கு தமிழக அரசு துணைபோகிறாதா என்று கேள்வி எழுகிறது. மேலும் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது என முதல்வர் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் வாக்குறுதியை மீறி குத்தகை மாற்றம் தொடர்பாக ஜெம் நிறுவனத்துடன் தமிழக அரசு கடித போக்குவரத்து செய்துள்ளது. தமிழக அரசின் இந்த செயல் நெடுவாசல் விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகும். இவ்வாறு ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அரசு துணை போகக்கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.