கடன் மோசடியில் சிக்கிய விஜய் மல்லையாவின் வழக்கில், போதிய ஆதாரங்களைச் சமர்பிக்க இந்தியா ஏன் தாமதப்படுத்துகிறது என லண்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 9,000 கோடி ரூபாய்க்குமேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தாத மல்லையா, இங்கிலாந்தில் அடைக்களம் புகுந்தார். வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்துக்குத் தப்பிச்சென்ற விஜய் மல்லையா, ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் வெளிவந்தார். இந்தநிலையில், அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில், மல்லையாவைக் கைதுசெய்து இந்தியா அழைத்து வரும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் உள்ளனர்.
ஆனால். நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் மல்லையாவின் ஜாமீன் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற நீதிபதி எம்மா லூசி அர்பத்நாட், இந்தியாவைக் கேலி செய்யும் தொணியில் கேள்வி எழுப்பினார். 'மல்லையா வழக்கில் இதுவரை எவ்விதமான ஆதாரங்களும் இந்தியா சார்பாக சமர்ப்பிக்கப்படவில்லை. ஆறு மாதங்கள் கடந்தும் வழக்கில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இந்தியர்கள் பொதுவாக சொன்ன சொல்லை காலம் தவறாமல் கடைபிடிப்பார்களா..' என நீதிபதி அர்பத்நாட் கேள்வி எழுப்பினார்.
ஆனால், வழக்கில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியுள்ளது இந்தியா. இதனால், வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினமும் மல்லையா ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியுள்ளது இந்தியா. இதனால், வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினமும் மல்லையா ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.