Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2017

தங்கத்தில் மாற்றப்பட்டுள்ள உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் ; பொன்விழா நிறைவையொட்டி !


ஏடிஎம் எந்திரம் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி லண்டனில் உள்ள உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் தரும் எந்திரம் முதன்முதலில் லண்டன் என்ஃபீல்டில் உள்ள பார்க்ளேஸ் வங்கியில் 1967-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நிறுவப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவி மக்களின் அன்றாட பண தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

ஏடிஎம் அறிமுகமாகி 50-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு உலகின் முதல் ஏடிஎம் எந்திரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிடடல் பண பரிவர்த்தனைகள் வந்தாலும் ஏடிஎம் எந்திரங்களுக்கு உள்ள மவுசு இன்றளவும் மக்களிடம் குறையவில்லை. தற்போது உலகம் முழுவதும் 30 லட்சம் ஏடிஎம்கள் செயல்படுகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.