Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2017

முஸ்லிம் வாலிபர் "மாட்டிறைச்சி" கொலை வழக்கில் ஒரு குற்றவாளி கைது ! விசாரணை மந்தம் !!


மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக குற்றம்சாட்டி டெல்லி அருகே நடந்த இளைஞரின் கொலை சம்பவத்தில் ஒரு குற்றவாளியை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது.

16 வயது ஜுனைட் கான், அவரின் சகோதரர் ஹசீப் மற்றும் 2 உறவுக்கார சிறுவர்கள் ஆகியோர் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு ரம்ஜான் பண்டிகைக்கு துணிமணிகளை வாங்க வந்திருந்தனர். இதன்பிறகு, சொந்த ஊருக்கு திரும்ப டெல்லி - பல்லப்கார் பயணிகள் ரயிலில் துக்லகாபாதில் ஏறினர்.

அவர்கள் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 20 பேர் கொண்ட, ஒரு கும்பல் 4 பேரின் மீது கத்தி, கூர்மையான ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தும் யாரும் அவர்களை தடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் மதுரா செல்லும் வழியில் உள்ள அசாவதி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து வீசினர். 4 பேரில் ஜூனைட் கான் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது என்றார். ஆனால் இதுவரை 1 குற்றவாளியை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். ரமேஷ் என்ற அந்த வாலிபர் குடி போதையில் இருந்ததாகவும், சிலர், மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கூறி 4 இளைஞர்களை கைகாட்டியதாகவும், எனவே தாக்கியதாகவும் ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.