Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2017

மாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் மனிதர்கள் மீது மோதிய போலீஸ் ஜீப் - ஒரு பெண் பலி


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பியதால் நிலை தடுமாறிய போலீஸ் ஜீப், சாலையக் கடந்து சென்ற மனிதர்கள் மீது மோதியதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பியதால் நிலை தடுமாறிய போலீஸ் ஜீப், சாலையக் கடந்து சென்ற மனிதர்கள் மீது மோதியதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரபிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்ரியா என்ற பகுதியில் இன்று போலீஸ் ஜீப்பானது சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென குறுக்கே மாடு வந்ததால், டிரைவர் ஜீப்பை சட்டென்று திருப்பியுள்ளார்.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த வாகனமானது அந்த சாலையை கடந்து சென்ற பொதுமக்கள் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் உஷா தேவி என்ற 60 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 2 குழந்தைகள் உள்ளிட்ட மூவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஜீப்பை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.