Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2017

பிரதமர் மோடி பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல் : இந்திய பொருளாதார வீழ்ச்சி எதிரொலி !


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாஜகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் மன்மோகன் சிங் ஆட்சியின் பொது 10.3% இருந்ததாகவும், மோடி ஆட்சியில் 6.6%ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்ப்பரேட் நலம்காக்கும் அரசாக தான் மோடி அரசு இருக்கிறது என்று தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டை காப்பதை விட மாட்டை காப்பாற்றும் அரசாக மோடி அரசு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் இயக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெறும் நடைபயணத்தை திருமாவளவன் தொடங்கி வைத்தார். சேலத்தில் இருந்து சென்னை நோக்கி செல்கின்ற இந்த நடைப்பயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.