Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2017

ஈஷா யோகா மைய கட்டடங்களுக்கு சிறப்பு அனுமதி! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


கோவை ஈஷா யோகா மையக் கட்டடங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தின்மீது பல்வேறு புகார்கள் உள்ளன. குறிப்பாக, கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு 112 அடி ஆதி யோகி சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ராஜவாய்க்கால் கால்வாயை ஆக்கிரமித்து ஆதி யோகி சிலை கட்டப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பதிலளித்துள்ளார். அதில், "ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புகார்குறித்து ஈஷா யோக மையத்தில் ஆய்வுசெய்யப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கட்டடங்களுக்கு விதிகளைத் தளர்த்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தடையில்லாச் சான்று அளித்ததால், மலைதளக் குழு சிறப்பு அனுமதி அளித்துள்ளது" என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.