Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2017

குற்றவாளிகள் பெயர்களை அறிவித்தார் நீதிபதி : மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் வெளியானது தீர்ப்பு !


1993 ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மும்பையில் உள்ள பயங்கரவாதம் மற்றும் சீர்குலைப்பு செயல்கள் தடுப்பு பிரிவு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

2006 ம் ஆண்டு முக்கிய விசாரணை நிறைவு பெற்று 100 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக 2003 முதல் 2010 ம் ஆண்டு வரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது.

குண்டுவெடிப்பு நடைபெற்று சுமார் 24 ஆண்டுகளுக்கு பின் இன்று 7 பேர் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொருவர் பெயராக கூறி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தபடி உள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட தாகிர் மெர்சன்ட், பைரோஸ்கான், முஸ்தபா தோஸ்சா, அப்துல் ரஷித் கான், கரிமுல்லா ஷெய்க் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார். சதி திட்டம், கொலை உள்ளிட்ட செயல்களுக்காக இந்திய தண்டனை சட்டம், தடா, வெடிகுண்டு ஆயுத தடுப்பு சட்டம் உள்ளிட்டவற்றின்கீழ் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முழு தீர்ப்பு விவரம் சில நிமிடங்களில் வெளியாகும். இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், டைகர் மேமுன் உட்பட மேலும் 33 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.

குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.