June 29, 2017
வாலிபர் வெறிச்செயல் : ஈரோடு அருகே சொத்து தகராறில் தந்தை - பாட்டி சுட்டுக்கொலை !
ஈரோடு அருகே உள்ளது சித்தோடு. இந்த ஊரை அடுத்துள்ள வசுவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியர் ஆக பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் பாவாயி (75). பழனிசாமியின் மகன் சந்தோஷ்குமார் (23). இவர் ஈரோட்டில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.
பழனிசாமிக்கும் மகன் சந்தோஷ் குமாருக்கும் கடந்த 3 மாதமாக சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் வசுவப்பட்டியில் உள்ள தனது தாயார் பாவாயியை பார்க்க பழனிசாமி வந்திருந்தார். அப்போது அங்கு மகன் சந்தோஷ்குமாரும் வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தந்தை என்றும் பாராமல் சுட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி பாவாயி “அடப்பாவி என்ன காரியம் செய்து விட்டாய்?” என்று ஓடி வந்து தடுக்க முயன்றார். அவரையும் சந்தோஷ்குமார் துப்பாக்கியால் சுட்டான்.
இந்த கொடூர செயலில் தந்தை பழனிசாமி அவரது தயார் பாவாயி ஆகிய இருவரும் குண்டு துளைத்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
இருவரும் கீழே சுருண்டு விழுந்து இறந்ததும் சந்தோஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு மற்றும் பவானி, ஈரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் வெறிச்செயல் : ஈரோடு அருகே சொத்து தகராறில் தந்தை - பாட்டி சுட்டுக்கொலை !
Reviewed by Admin
on
June 29, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.