June 20, 2017
பல் குத்த தங்க குச்சியாம்… அரசு பள்ளிகளை அடியோடு அழித்து விட நேற்று செங்கோட்டையன் அறிவித்த திட்டம்..
இன்றைக்கு கல்வி கூடங்கள் பல மாற்றங்களை கண்டு விட்டது. ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை எல்லாம் தாண்டி, தற்போது மத்திய கல்வி முறை, சமச்சீர் கல்வி முறையில் வந்து நிற்கிறது.
ஏற்கனவே தொழில்நுட்பங்கள் வரவால் பள்ளிகளில் மொபைல் பயன்படுத்தும் மாணவர்கள் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.
அதனை தொடர்ந்து பள்ளிகளில் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இருந்த போதிலும் இன்னமும் சில மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இன்னமும் பல மாணவர்கள் சீரழியாமல் இருக்க காரணம் மொபைல் போன்றவற்றில் இணையதளங்கள் பயன்பாடு தெரியாத காரணத்தினால் தான்.
அதற்கும் வேட்டு வைக்க ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.
அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். \
11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இன்னும் பல பள்ளிகளில் முழுமையாக சுகாதார கழிப்பிடம் கூட இல்லாத அவல நிலை இருக்கும் போது இந்த ஆடம்பர திட்டம் எதற்கு..?
ஒரு மாணவனின் கணினி அறிவு வளர வேண்டும் என்றால் பள்ளிகளுக்கு கணினிகளை வழங்கி அதற்கு அகன்ற அலைவரிசை இணையதள வசதி ஏற்படுத்தி கொள்ளலாமே.
வை பை எதற்கு? அது கம்பியில்லாமல் இணையத்தை பரப்ப கூடியது. அப்படிஎன்றால் மொபைல் போன்ற சாதனங்களில் தான் இணையத்தை பயன்படுத்த இலகுவாக இருக்கும்.
இத்திட்டம் மாணவர்களின் கற்றல் திறனை சீரழிக்குமே தவிர எள்ளளவும் பயன்படபோவதில்லை.
அரசு பள்ளி மாணவர்களின் அறிவை மழுங்கடிக்க செய்து, தனியார் பள்ளிகள் தான் தரத்தில் உயர்ந்தவை என்று காட்டிக்கொள்ள வழிகோலும் செயலாக
பல் குத்த தங்க குச்சியாம்… அரசு பள்ளிகளை அடியோடு அழித்து விட நேற்று செங்கோட்டையன் அறிவித்த திட்டம்..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.