Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2017

இனியாவது மக்களே திருந்துவீங்களா…? ஷா நவாஸ் கான் யார் என்றே எனக்கு தெரியாது – எம்.எல்.ஏ சரவணன்…


கடந்த பிப்ரவரி மாதத்தில், கூவத்தூரில் சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தபோது, பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும், பணம், தங்கம் ஆகியவை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால், அவை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சியில் எஸ்.எஸ். சரவணன் பேசுவதுபோன்ற ரகசியமாக பதிவுசெய்யப்பட்ட காட்சி ஒன்று ஒளிபரப்பானது.

அவரவர் தொகுதியிலிருந்து சென்னைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களை சசிகலா தரப்பினர் விமான நிலையத்திலேயே சந்தித்து,

2 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதியளித்ததாகவும் பிறகு ஆளுனரைச் சந்திக்கச் சென்றபோது,

4 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறியதாகவும் பிறகு கூவாத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது 6 கோடி ரூபாய் வரை தருவதற்கு முன்வந்ததாகவும் சரவணன் கூறுவது போன்ற காட்சிகள் அதில் இருந்தன.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சரவணன், அந்த வீடியோ காட்சியில் இருப்பது தான்தான் என்றும், ஆனால், அதில் உள்ள குரல் தன்னுடையதல்ல என்றும் விளக்கமளித்தார்.

மேலும், அந்தப் பேட்டியை ரகசியமாக ஒளிப்பதிவு செய்த ஷா நவாஸ் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும்,

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

இப்பொது அவரும் யாரென்று தெரியாது என கூறிய ஷா நவாஸ்சும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.