June 27, 2017
நவம்பரிலேயே பட்ஜெட் தாக்கல்..? நிதியாண்டை ஜனவரி - டிசம்பர் மாற்ற மத்திய அரசு முடிவு..!
நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் நவம்பர் மாதமே தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நிதியாண்டானது ஏப்ரல் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகிறது. இந்த வழக்கத்தை மாற்றி ஆண்டின் முதல் மாதமான ஜனவரியிலேயே நிதியாண்டையும் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது 1867-ம் ஆண்டிலிருந்து நிதியாண்டின் துவக்க மாதமாக ஏப்ரல் மாதமே வழக்கத்தில் உள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னும் கூட இந்தியாவில், ஏப்ரல் - மார்ச் வரையிலான காலமே நிதியாண்டாக உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் நிதியாண்டை ஜனவரி மாதமே தொடங்கலாம் என விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த முன்னெடுப்புகளை மத்திய நிதித்துறை அமைச்சகம் மேற்கொண்டு வந்தது.
அடுத்த ஆண்டு முதலே நிதியாண்டை ஜனவரியில் துவங்கும்படி மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். உலகில் பல வளர்ந்த நாடுகள், ஜனவரி மாதத்தையே தங்கள் நிதியாண்டின் தொடக்க மாதமாக வைத்துள்ளனர். இதனடிப்படையில் நிதியாண்டு ஜனவரி மாதமே இந்தியாவில் துவக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.
இதுவரை மார்ச் மாதம் நிதியாண்டு நிறைவடைந்ததால் அதற்கு முன் மாதமான பிப்ரவரியில் மத்திய அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஆனால் மத்திய அரசின் புதிய யோசனையின் படி ஜனவரியில் ஆண்டின் நிதியாண்டானது துவக்கப்பட்டால், நவம்பர் மாதமே மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நிதியாண்டு மாற்றப்பட்டு விட்டால், பிரிட்டிஷ் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் சுமார் 150 ஆண்டு கால வரலாறு, மோடி அரசால் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
நவம்பரிலேயே பட்ஜெட் தாக்கல்..? நிதியாண்டை ஜனவரி - டிசம்பர் மாற்ற மத்திய அரசு முடிவு..!
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.