Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2017

தமிழர்களுக்கு செய்த எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் தெரியுமா…? ரஜினியை தூக்கிப் பிடித்த தந்தி தொலைக்காட்சி !!


ஆட்டிறைச்சிக் கடை நடத்துபவருக்கும், மாட்டிறைச்சிக் கடை நடத்துபவருக்கும் கூட மனசாட்சிகள் உண்டு. ஆனால், ஊடகங்களை நடத்துபவர்களுக்கு தான் மனசாட்சி என்பதே இல்லை.
அவர்களுக்கு அவர்கள் காரியம் மட்டும் தான் முக்கியம். அதற்காக எந்த நேரத்திலும் ஈரத் துண்டை போட்டு கழுத்தை அறுக்கக் கூட தயங்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு கழுத்தறுப்பு தான் தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு ஆகும்.
தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால் திமுகவுக்கு 44%, அதிமுகவுக்கு 28%, பாரதிய ஜனதாவுக்கு 3%, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2%, நாம் தமிழருக்கு 2% வாக்குகள் கிடைக்குமாம். மற்றவர்களுக்கு 20% வாக்குகள் கிடைக்குமாம்.
இந்தக் கருத்துக் கணிப்பு உண்மை என்பதை மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை கூட நம்பாது. திமுகவுக்கு 44% வாக்குகள் என்பது எந்தக் காலத்திலும் கிடைத்ததில்லை.
1971 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.
அப்போது காங்கிரசுக்கு 10 மக்களவைத் தொகுதிகளை மட்டும் ஒதுக்கிவிட்டு, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டது.
அதாவது காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கே கிடைத்தது. அதுமட்டுமின்றி அப்போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்தன.
அப்போது மட்டும் தான் திமுக 48% வாக்குகளை வாங்கியது.
அதன்பின்னர் ஒருமுறை கூட திமுக 40 விழுக்காட்டுக்கும் கூடுதலாப வாக்குகளை வாங்கியதே இல்லை.
ஆனால், பாண்டேவின் திமுக பாசம் கள்ள ஓட்டுக்களையும் சேர்த்து திமுகவுக்கு 44% வாக்குகளை வாங்கித் தந்திருக்கிறது. அதிமுகவுக்கு 28% வாக்குகள் கிடைக்குமாம்.
எந்த அதிமுகவுக்கு என்பதை பாண்டே சொல்லாமல் தந்திரமாக தவிர்த்திருக்கிறார். அதைவிடக் கொடுமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2% வாக்குகள் மட்டும் தான் கிடைக்குமாம்.
தென் மாவட்டங்களில் மொய்விருந்து என்றொரு கலாச்சாரம் உண்டு. அதாவது குடும்பத்தில் பணத்தேவை ஏற்பட்டால் மொய்விருந்து வைத்து அதில் பங்கேற்க ஊர்மக்களையும், சொந்தங்களையும் அழைப்பார்கள்.
அவர்களும் போய் ஆயிரக்கணக்கில் மொய் எழுதுவார்கள். அதன் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தொழில் தொடங்குவதற்கோ அல்லது சுப காரியங்களுக்கோ பயன்படுத்திக் கொள்வார்கள்.
அதேபோல் தான் பாண்டே போன்றவர்களுக்கு பணம் தேவைப்பட்டால் மொய் விருந்து ஸ்டைலில் கருத்துக் கணிப்பு நடத்தத் தொடங்கி விடுவார்கள்.
சாதாரண மக்களிடம் நடத்தப்படும் மொய் விருந்தை விட இதில் அதிக வசூலும் தேறுமாம்.
தந்தி குழுமத்தில் உள்ள இரு பெரும் தலைகளுக்கு இடையே வசூல் போட்டி உச்சத்தை அடைந்திருகிறதாம்.
அந்த இருவரில் மூத்தவருக்கு இரு கழகங்களும் மாளிகை வாங்கிக் கொடுத்துள்ளனவாம். ஆனால், இளையவருக்கு அதிமுக ஆதரவில் ஒரு மாளிகை மட்டும் தான் கிடைத்திருக்கிறதாம்.
திமுக சார்பிலும் ஒரு மாளிகையை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்போது திமுகவைத் தூக்கிப் பிடிக்கும் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதாம்.
தமிழை தாழ்த்தி இந்தியை தூக்கிப் பிடிப்பதற்காக இந்தி வெறியர்களிடமிருந்தும், ரஜினியை தூக்கிப் பிடிப்பதற்காக அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும் லட்சம் மற்றும் கோடிகளில் மொய் தேறும் என்பதால் தான் அடுத்தடுத்து கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றனவாம்.
பொதுமக்கள் ஊடகங்களை நம்புகின்றனர். அவர்கள் செய்திகளை உண்மை என்று நினைக்கின்றனர்.
அப்படிப்பட்ட அப்பாவிகளுக்கு, பணம் வாங்கிக் கொண்டு தவறான தகவல்களை வழங்குவது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் தெரியுமா?
பாண்டே தொழிலுக்கு வந்த நாளில் இருந்து இன்று வரை பணத்தை வாங்கிக் கொண்டு பாவங்களை செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பாண்டே … நீங்கள் செய்த பாவங்கள் போதும்.
இத்துடன் விட்டு விடுங்கள். நீங்கள் பாவமன்னிப்புக் கேட்கும் நேரம் வந்து விட்டது. மக்களுக்கு முடிந்தவரை நன்மைகளை செய்து பாவங்களை கழுவுவதற்கு வழியைத் தேடுங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.