Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

ஒரு உயிரை விட ஜனாதிபதி பெரியவரா..? ஆம்புலன்ஸ் செல்ல ஜனாதிபதி காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து


பெங்களூரில் ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்க்காக குடியரசுத்தலைவரின் காரை நிறுத்தி, அவரை காத்திருக்க வைத்த டிராபிக் போலீஸ் ஒருவருக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.
பெங்களூரில் சென்ற வாரம் சனிக்கிழமையன்று மெட்ரோ ரயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சென்றார்.
அப்போது சாலையில் குடியரசுத்தலைவரின் வாகனமும் , ஆம்புலன்சும் எதிரெதிர் திசையில் வந்துகொண்டிருந்தது.
யாரவது ஒருவரின் வாகனம் மட்டுமே முன்னோக்கி செல்லமுடியும் என்ற சூழ்நிலையில் அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீஸ் நிஜலிங்கப்பா, ஆபத்தில் இருக்க கூடிய ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குடியரசுத்தலைவரின் வாகனத்தை நிறுத்தி ஆம்புலன்சை செல்ல அனுமதித்தார்.
இதனைக்கண்ட குடியரசுத்தலைவர் டிராபிக் போலீஸ் நிஜலிங்கப்பாவை மனதார பாராட்டினார். தமிழகத்தில் ஒரு அமைச்சர் வந்தாலே சாலையை மறித்து அவ்வழியே மற்ற வாகனங்களை அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு ஆம்புலன்சும் விதிவிலக்கல்ல.
பெங்களூர் டிராபிக் போலீஸ் நிஜலிங்கப்பாவின் செயலை தமிழக போலீஸார்கள் ஒரு நல்ல முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.
இனிமேலாவது தமிழக டிராபிக் போலீஸார் ஆம்புலன்சுகளுக்கு வழிவிட்டு, உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களுக்கு முக்கியத்துவமளித்து பொறுப்புணர்வோடும், சமுதாய அக்கறையோடும் நடந்துகொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.