Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2017

நீண்ட வரிசையில் நின்று நோன்பு தொடங்கும் இஸ்லாமியர்கள்


இஸ்லாமியர்கள், ரம்ஜான் மாதத்தின் 30 நாளும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். மேலும், வானில் தோன்றும் பிறையைப் பார்த்து, ரம்ஜானுக்கு நோன்பு தொடங்குவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில், ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பைத் தொடங்குவார்கள்.
இந்த ஆண்டு, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்படவில்லை. எனவே, ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் 28 ஆம் தேதி நோன்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து, இஸ்லாமியர்கள் தொடர்ந்து நோன்பிருந்துவருகின்றனர்.

குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு சென்னையில் 'ஷஹர்' என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்நிலையில், ராயப்பேட்டை அருகில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், 30 நாளும் நோன்பு தொடங்க இலவச உணவு வழங்கப்படுகிறது. இன்று அதிகாலை, அங்கு நீண்ட வரிசையில் வந்து உணவு சாப்பிட்டபின், நோன்பைத் தொடங்கினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.