June 7, 2017
ஒ.பி.எஸ் அணி எம்.எல்.ஏக்கள் தினகரனிடம் வர தயார்...!!! - குண்டு தூக்கி போடும் ஏ.கே.போஸ்...
எடப்பாடி தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் 30 பேர் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஒ.பி.எஸ் தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் தங்கள் தரப்புக்கு வர தயாராக உள்ளதாக அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ போஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக, தற்போது மூன்றாக உடைந்துள்ளது. டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்து அறிவித்தது. மேலும் தங்கள் தரப்பில் இருந்து தினகரனை யாரும் சந்திக்க மாட்டோம் என தெரிவித்தது.
இதையடுத்து தினகரன் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. டி.டி.வி.தினகரனை எடப்பாடி தரப்பில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று வெற்றிவேல், கதிர்காமு, செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் தினகரனை சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆட்சியை எடப்பாடி வழிநடத்தட்டும், கட்சியை தினகரன் வழிநடத்தட்டும். இதை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் ஒ.பி.எஸ் தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் தங்கள் தரப்புக்கு வர தயாராக உள்ளதாகவும், தமிழகத்தில் ஆட்சி கவிழாது எனவும் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ போஸ் தெரிவித்துள்ளார்.
ஒ.பி.எஸ் அணி எம்.எல்.ஏக்கள் தினகரனிடம் வர தயார்...!!! - குண்டு தூக்கி போடும் ஏ.கே.போஸ்...
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 07, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.