June 16, 2017
சபாநாயகர் தனபாலிடம் சிடியை அளித்தார் ஸ்டாலின் : எம்எல்ஏக்கள் விற்பனைக்கு ?
தமிழக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்ததாக எம்எல்ஏ சரவணன் கூறியதாக வெளியான விடியோ ஆதாரத்தை சபாநாயகர் தனபாலிடம் மு.க. ஸ்டாலின் அளித்தார்.
தமிழக எம்எல்ஏக்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக வெளியான விடியோ குறித்து மேலும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
அந்த ஆதாரங்களை, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு தனது அறைக்குக் கொண்டு வந்து கொடுக்குமாறு சபாநாயகர் தனபால் கூறினார்
சபாநாயகர் சொன்னபடி, மு.க. ஸ்டாலின் இன்று மதியம், அவரது அறைக்குச் சென்று, விடியோ அடங்கிய சிடி ஆதாரங்களை தனபாலிடம் அளித்தார்.
முன்னதாக, விடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால், சட்டபபேரவையில் இது குறித்து விவாதிக்க அனுமதிப்பீர்களா என்று ஸ்டாலின் கேட்டார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால், திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சபாநாயகர் தனபாலிடம் சிடியை அளித்தார் ஸ்டாலின் : எம்எல்ஏக்கள் விற்பனைக்கு ?
Reviewed by Admin
on
June 16, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.