Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2017

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்.. உயிருடன் தீயிட்டு கொளுத்திய காமூகன்.. யோகியின் ஆட்சியில் !


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஷிகணேஷ்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவர், செல்போனை சார்ஜ் செய்வது போல வீட்டிற்குள் சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து அவரை தாக்கி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அவரை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இளம்பெண்ணின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது அதிர்ச்சியுற்றனர்.

பின்னர் உடல் முழுவதும் தீபற்றிய நிலையில் இளம்பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இளம்பெண் துடிதுடித்து பலியானார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்னை இளைஞர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அங்கு பெரும் ஏற்படுத்தியுள்ளது..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.