Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பாலின சமத்துவத்தினை வலியுறுத்த தயாராகும் கனடா!


கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பாலின சமத்துவத்தினை வலியுறுத்தும் வகையில் ஏனைய உறுப்பு நாடுகளுக்கு கனடா அழுத்தங்களைக் கொடுக்கும் என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான ஜி7 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள கியூபெக் மாநிலத்தின் ‘லா மல்பாயி’ நருக்கு பிரதமர் ஜஸ்ரின் நேற்று (வியாழக்கிழமை) பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“ஜி7 மாநாடு நடத்துவதற்கு தமக்கு கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பம் இது. இதன்மூலம் நாட்டுக்கு மிக முக்கியமான விடயங்களை முன்னோக்கி நகர்த்த முடியும். 2018ஆம் ஆண்டு உலக நாடுகளின் பார்வை இந்த உச்சி மாநாடு நடாத்தப்படும் இடத்தை நோக்கி குவிக்கப்படும். மாநாடு இடம்பெறவுள்ள குறித்த இடம் மிகவும் சிறப்பான இடம். அனைத்துலக நாடுகளின் தலைவர்களை வரவேற்பதற்கு மிகவும் சிறந்த இடமாக இது அமையும்.
அடுத்த ஆண்டுக்கான ஜி7 மாநாட்டினை ஏற்று நடாத்தும் நாடு என்ற வகையில், கனடா தனது நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக இது அமையும். இதேவேளை இந்த மாநாடு நடைபெறும் இடத்திற்கான பாதுகாப்பின் அவசியம். மாநாட்டில் கலந்துகொள்ள வரும் வெளிநாடுகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டியதுடன், உள்ளூர் மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.