Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2017

மோடியிடம் கேள்வி கேட்ட ரஷ்ய பெண் நிருபர் "நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா"


நரேந்திர மோடியை பார்த்து,' நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா ' என பிரபல டிவி பெண் நிருபர் கேட்டது கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.

இந்நிலையில், ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். தொடர்ந்து செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரில் உள்ள கோன்ஸ்டன்டீன் மாளிகையில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது என்பிசி டிவியின் பிரபல செய்தியாளர் மேகின் கெல்லி என்பவர், பிரதமர் மோடியிடம் பேட்டி எடுத்தார். புடினும் உடன் இருந்தார்.

அப்போது, பிரதமர் மோடி, கெல்லி குடையுடன் உள்ளவாறு டுவிட்டரில் வெளியிட்ட படம் நன்றாக உள்ளதாக பாராட்டினார். இதனால் சற்று ஆச்சர்யம் அடைந்த கெல்லி மோடியிடம் நீங்கள் டுவிட்டரில் உள்ளீர்களா என கேள்வி கேட்டார். இதனை கேட்ட மோடி சிரித்தார்.
இந்த செய்தி டுவிட்டரில் வேகமாக பரவியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.