Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 19, 2017

'பெற்றோர்களுக்காக காதலைத் தியாகம் செய்யும் பெண்கள்': உச்சநீதிமன்றம்!


பெற்றோர்களின் விருப்பத்துக்காகத் தங்கள் காதலை தியாகம் செய்யும் பெண்கள் அதிகம், இது இந்தியாவில் பொதுவான விஷயம் கூட' என உச்சநீதிமன்றம் ஒரு காதல் தற்கொலை வழக்கில் கூறப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்துக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்துள்ளனர். ஆனால், பெற்றோர்களின் தொடர் துன்புறுத்தலால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில் காதலன் பிழைத்துக்கொள்ள, காதலி மரணமடைந்துவிட்டார்.
இந்த வழக்கில் அந்தப் பெண்ணை, காதலன் கொலை செய்ததாகக் கூறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 'தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தன் காதலியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் காதலன். இருவரும் விஷம் எடுத்துக்கொண்டுள்ளனர். இதில் காதலி விஷம் அதிகமாக எடுத்துக்கொண்டதால் உயிருக்கு தவித்து வந்துள்ளார். உதவி தேடிச் சென்ற காதலன் திரும்பி வரும் முன்னர், அப்பெண் வலி பொறுக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்'. இதனால் அந்நபருக்கு இந்தியச் சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
'இச்சம்பவம் வேதனை அளித்தாலும், தண்டனை சட்டபூர்வமாகவே வழங்கப்படும். இந்தியாவில் பெற்றோர்களுக்காகப் பெண்கள் தங்கள் காதலை தங்கள் விருப்பத்தையும் மீறி தியாகம் செய்கின்றனர்' என உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.