ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ள ராம் நாத் கோவிந்துக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க தமிழக முதல்வர் டெட்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவிக்க டெல்லி புறப்பட்டு சென்றார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.
தாங்கள் அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்துவை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். மேலும், ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்யும் போது உடன் இருக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாஜக வேட்பாளர் ராம் நாத்தை ஆதரிப்பதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
இந்நிலையில், இன்று டெல்லிக்கு விமானம் மூலம் முதல்வர் பழனிச்சாமி புறப்பட்டார். சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற அவர், டெல்லி சென்றார்.
பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார் முதல்வர் பழனிச்சாமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.