Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2017

அவிநாசியில் மாணவிகளை நீண்ட நாட்களாக பாலியல் துன்புறத்தல் செய்து வந்த அரசு பள்ளி ஆசிரியரை சிறைபிடித்த பெற்றோர் தர்ம அடி


திருப்பூர் அவிநாசி அருகே நீண்ட நாட்களாக சிறு வயதுடைய மாணவிகள் மற்றும் பருவ வயதைடைந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளாக்கி வந்த அரசு பள்ளி ஆசிரியரை பெற்றோர்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மாணவிகளுக்கு சாக்லெட் கொடுத்து உள்ளாடைகளை கழட்டுவது, ரெஸ்ட் ரூமிற்கு சென்று அவர்களை பாலியல் துன்புறத்தல் செய்வது என தனது காம வெறியாட்டத்தை நீண்ட நாட்களாக நடத்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவிகள் பெற்றொர்களிடம் இது குறித்து புகார் அளித்ததும், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட ஆசிரியரை சிறைபிடித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் ரோட்டில் அமர்ந்து ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியல போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலிசார் வந்து ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த ஆசிரியருக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.