Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2017

எஸ்.வி.சேகரால் சலசலப்பு : அடித்தவன் பீஹாரி.. அடிபட்டவன் மலையாளி.. போராட்டம் நடத்துபவன் தமிழன் !!


சென்னை ஐஐடி போராட்டம் தொடர்பாக நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் போட்டுள்ள டிவீட்டால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

மாடுகளை கறிக்கு விற்பனை செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த சூரஜ் என்ற மாணவரை ஒரு குரூப் அடித்து தாக்கியது.

படுகாயமடைந்த சூரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அந்த டிவீட்டில் அடித்தவன் பீஹாரி, அடிபட்டவன் மலையாளி, போராட்டம் நடத்துபவன் தமிழன் என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இந்த டிவீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் இந்த டிவீட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.