Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2017

மலைக்க வைக்கும் தலைமாற்று அறுவை சிகிச்சை.....


ஒருவரின் குணநலன்கள் முதலாக, அவர்களின் செயல்பாடுகள் வரை அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரு அங்கமாக நமது மூளை செயல்படுகிறது.
சிலருக்கு மூளை செயல்படும் சிலையில் இருந்தும் கழுத்துக்கு கீழ் உணர்வின்றி காணப்படுவார்கள். உடல் அசைவு இருக்காது ஒவ்வொரு செயலிற்கும் அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டி வரும்.
கடந்த இரண்டு வருடங்களாகவே தலை மாற்று அறுவை சிகிச்சை பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இது மற்ற சிகிச்சைகளை போல அல்லாமல் மிகுவும் நுட்பமானது. உலகம் முழுவதும் பல மருத்துவர்கள் சாத்தியமில்லை என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
இருந்தபோதிலும் இதை செய்து காட்ட முடியும் என்கின்றனர் ஆஸ்திரேலிய மருத்துவர்கள். இந்த அறுவை சிகிச்சையை முழுவதுமாக செய்து முடிக்க 80 மருத்துவர்கள் குழு தேவைப்படும்.
தலை வெட்டி 7 முதல் 15 நிமிடத்திற்குள் பொருத்தி விட வேண்டும்.  பாலிஎத்திலின் கைல்கோல் (Polyethylene gylcol) என்ற பசைகொண்டு தலை ஒட்டப் படுகிறது.
இதன் மெல்லாம் முதுகுத்தண்டின் இருமுனைகளுக்கு இடையே தொடர்பு ஏற்படுமாறு பொருத்த வேண்டும்.
அறுவை சிகிச்சையின்போது நோயாளியை மயக்கமுறச்செய்து தசைகள் மற்றும் ரத்தநாளங்களை ஒன்றாக வைத்து தைக்க வேண்டும்.
இவ்வாறு மலைக்க வைக்கிறது இந்த தலைமாற்று அறுவை சிகிச்சை. எது எவ்வாறாயினும் இந்த வருடம் நடக்க தானே போகிறது பார்த்து விடலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.