Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2017

யூ-டியூப் வீடியோக்களை பார்த்து சொந்த விமானம் தயாரித்துள்ள கம்போடிய மெக்கானிக்


கம்போடியா கார் மெக்கானிக் ஒருவர் யூடியூப் தளத்தில் வீடியோக்களை பார்த்து தனக்கென சொந்த விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். கம்போடியாவை சேர்ந்த 30 வயதான வர் பாயென்லாங், கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். பகல் முழுவதும் கடுமையாக உழைக்கும் இவர், இரவில் தூங்காமல் விமானம் தயாரிப்பது சார்ந்த யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்துள்ளார்.

விமானம் தயாரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தானும் ஒரு விமானத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பயன்படுத்திய போர் விமானத்தை வாங்கி அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானத்தில் இருந்த பழைய கருவிகள் மற்றும் பொருட்களை உருக்கி அவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளார்.

விமானம் முழுக்க தயாரானதும் கடந்த மார்ச் மாதத்தில் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். வயல் வெளிக்கு அருகே அமைக்கப்பட்ட விமான தளத்தில் விமானத்தை நிறுத்தியிருந்தார். அந்த விமானத்தை 3 பேர் தள்ளி என்ஜினை இயங்க உதவி செய்தனர். இந்த விமானத்தை அவர் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தயாரித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.