Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

வாகன ஓட்டிகளுக்கு கெடுபிடி... ஹெல்மெட், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்!


வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதோடு அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான சாலை பாதுகாப்புக் குழு ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையை ஏற்று வாகன ஓட்டிகளுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 'வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் எனவும், சோதனை ஆய்வின்போது அசல் உரிமத்தைக் காண்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காப்பீட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்கள் சிறைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வாகனத்தை அதிவேகமாக இயக்குதல், சிவப்பு விளக்கை தாண்டுதல், குடித்துவிட்டு வாகனத்தை இயக்குதல், வாகனத்தை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் அதிக ஆட்களை ஏற்றுதல் ஆகிய விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் உரிமங்களை தற்காலிக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.