Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

பேஸ்புக்கில் கருத்தைப் பதிவிட்டவருக்கு மரண தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்..!


பாகிஸ்தானில், இஸ்லாமிய மதம் குறித்து எதிர்மறையான கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ஒகாரா பகுதியைச் சேர்ந்த டைமூர் ராசா என்பவர் இஸ்லாமிய மதம் குறித்து இழிவான கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானின் சிறுபான்மை ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். இதுதொடர்பான வழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷபீர் அகமது, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். பேஸ்புக்கில் கருத்தைப் பதிவிட்டதற்கு மரண தண்டனை அளிப்பது பாகிஸ்தானில் இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தானில் சுமார் 97 சதவீத மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். அங்கு இஸ்லாம் மதம் குறித்து தவறான கருத்துகளை பரப்புபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.