பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுடன் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
2015 ஆம் ஆண்டு முதல், ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. மத்தியில் குறிப்பாக பா.ஜ.க ஆட்சியமைத்தப் பின்னர், யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மேலும் யோகா தினம் பெரியளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த வருட யோகா தினத்தை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வெகு விமர்சையாகக் கொண்டாட பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த யோகா நிகழ்வில், பதஞ்சலி நிறுவனரும், யோகா குருவுமான பாபா ராம்தேவுடன் இணைந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் யோகா செய்யவுள்ளார். இதற்கான பயிற்சி இன்று நடைபெற்றது.
யோகியும், பாபா ராம்தேவும் யோகா பயிற்சி செய்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 'நேற்று விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று இந்த யோகா ஒத்திகை தேவையா', 'பா.ஜ.க அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை', 'யோகி-ராம்தேவ் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை' என்று இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.